வசூல் வேட்டையில் ‘தி கோட்’ படம்: வெங்கட் பிரபு வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

'தி கோட்' பட இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்தது. தற்போது வரை இப்படம் ரூ.315 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'கில்லி' பட இயக்குனர் தரணி, விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!