வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் அறிவிப்பு

தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 4 நாள்களில் விலக உள்ளதைத் தொடா்ந்து, தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில், அக்.15 அல்லது16-ஆம் தேதி தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும். அக்.15, 16 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் 200 மி.மீ.க்கும் மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது