வடகொரிய தூதரக அதிகாரி தென்கொரியாவில் தஞ்சம்

வடகொரிய தூதரக அதிகாரி ரி இல் கியூ தனது குடும்பத்துடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

சியோல்,

கியூபாவில் வடகொரியாவுக்கான தூதரக அதிகாரியாக இருந்தவர் ரி இல் கியூ (வயது 52). இவர்வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தந்தையும், சர்வாதிகாரியுமான கிம் ஜாங் இல்லின் அரசாங்கத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்தநிலையில் ரி இல் கியூ தனது மனைவி, குழந்தைகளுடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனை தென்கொரிய உளவு நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளது. முன்னதாக கடந்த 2016-ல் லண்டனில் பணியாற்றிய வடகொரிய தூதர் டே யோங்ஹோ தென்கொரியா தப்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வடகொரியாவின் மோசமான அரசியல் சூழ்நிலை தெளிவாகி இருப்பதாக தென்கொரிய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்