வடக்கு செர்பியாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெல்கிரேட்,

வடக்கு செர்பியா நகரத்தில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவி சாட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மருத்துவக் குழு வந்தபோது விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் உள்பட 6 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவசர மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாக உள்துறை மந்திரி ஐவிகா டாசிக் தெரிவித்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து உள்துறை மந்திரி ஐவிகா டாசிக் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்துக்கு காரணம் அந்த வீட்டில் சார்ஜ் செய்யப்பட்ட மின்சார ஸ்கூட்டராக இருக்கலாம் என்று கூறுகின்றன. மேலும் உயிரிழந்த குழந்தைகள் 2 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்