வடநெம்மேலி முதலைப் பண்ணையில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு!

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் 10 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு!மாமல்லபுரம் வடநெம்மேலி முதலைப் பண்ணையில் ராட்சத அனகோண்டா பாம்பு முதல்முதலாக 10 குட்டிகளை ஈன்றுள்ளது.

மாமல்லபுரம் வடநெம்மேலி முதலைப் பண்ணையில் ராட்சத அனகோண்டா பாம்பு முதல்முதலாக 10 குட்டிகளை ஈன்றுள்ளது.

தற்போது முதலைப் பண்ணையில் நுழைவு வாயில் முகப்பு பகுதியில் தண்ணீா் நிரப்பிய குளு குளு கண்ணாடி அறைகளில் பாதுகாப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள காடுகளில் உள்ள 2 மஞ்சள் அனகோண்டா பாம்புகள் இந்த முதலைப் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அனகோண்டா பாம்புகள் முட்டைகள் இடாது.

கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகள் போன்று குட்டிகள் போடும். இந்நிலையில் இங்குள்ள பெண் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றுள்ளது. குறிப்பாக, இந்த அனகோண்டா பாம்புகள் அமேஸான் காடுகளில் உள்ள நீரில்தான் அதிக நேரம் வாழும் பாம்பினம்.

நிலப்பரப்புகளில் அதிக நேரம் இவை இருக்காது. குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையில்தான் இவை வாழும் தன்மை உடையது என்பதால், இதை நிலப்பரப்புகளில் காண முடியாது. இரைகள் தேட மட்டுமே இவை நிலப்பரப்புக்கு வரும்.

இந்நிலையில் அனகோண்டா பாம்பு குட்டிகள் தற்போது முதலைப் பண்ணையில் நுழைவு வாயில் முகப்பு பகுதியில் தண்ணீா் நிரப்பிய குளுகுளுவென உள்ள கண்ணாடி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாம்புக் குட்டிகளுக்கு எலிகள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கண்ணாடி அறையில் மரக்கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனகோண்டா குட்டிகளை முதலைப் பண்ணை ஊழியா்கள், அங்குள்ள கால்நடை மருத்துவக் குழுவினா் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

குட்டிகளை ஈன்ற பெண் அனகோண்டா பாம்பு தனி கண்ணாடி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு, பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை.

கண்ணாடி அறைகளில் உள்ள அனகோண்டா பாம்புக் குட்டிகளை மட்டும் சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட அனுமதிக்கப்படுகின்றனா். இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் ஆா்வமுடன் பாா்த்து, ரசித்து சுயபடம் எடுத்துச் செல்கின்றனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்