வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நாளை மறுநாள் தொடக்கம்

வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் தினசரி கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சென்னை:

பிரசித்தி பெற்ற வடபழனி முருகள் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (3-ந்தேதி) தொடங்கி 12-ம் தேதி வரை 10 நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பு அம்சமாக "சக்தி கொலு" எனும் பெயரில் பிரமாண்ட கொலு இடம்பெறுகிறது.

பக்தர்கள் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி 5 முதல் இரவு 9மணி வரையிலும் கொலுவை பார்வையிடலாம். காலை மற்றும் மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் தினசரி கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

4-ம் தேதி லலிதா சகஸ்ரநாம பாராணமும் இதைத்தொடர்ந்து 6-ம் தேதி மாலை திருமுறை பாராணயமும் நடக்கிறது. 11-ம் தேதி காலை மற்றும் மாலையில் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

12-ம் தேதி விஜய தசமி அன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் கை விரல் பிடித்து தொடக்க சுல்வியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Related posts

ரஷியா சென்றடைந்தார் மோடி!

யூடியூபர் இர்ஃபானுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!