வடைக்கு வழங்கிய சட்னியில் இறந்து கிடந்த தவளை – கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் பயணி ஒருவர் இரண்டு வடை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அந்த வடையை சாப்பிட முயன்றபோது, வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்ததை கண்டு அந்த பயணி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த கடையில் சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கேரள மாநிலம் ஷோரனூர் ரயில் நிலையத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
ரயில்வே துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
சோதனையை தொடர்ந்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் #Kerala#RailwayStation… pic.twitter.com/BBENVqtZdH

— Thanthi TV (@ThanthiTV) June 23, 2024

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்