வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்

சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் வெள்ளையன் இன்று காலமானார்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் த. வெள்ளையன் (76), நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

செப்டம்பர் 3-ஆம் தேதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

சொகுசு வீடுகளாக மாறும் நட்சத்திர ஹோட்டல்! கட்டடத்தை இடிப்பதில் இத்தனை சவாலா?

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

த. வெள்ளையன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் திரு.த.வெள்ளயன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களின் குரலாக , சாதி, மத, அரசியல் பேதமின்றி செயல்பட்டு வந்தவர் திரு.த.வெள்ளையன் அவர்கள். இவரது வணிகர் சங்க பேரவை மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. வணிகர்களின் காவலனாக இருந்து வந்தவர்.

அன்னாரின் மறைவு வணிகர் சங்கப் பேரவைக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

த. வெள்ளையன் மறைவுக்கு, வணிகர் தங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனின் இழப்பு வணிகர்களுக்கு பேரிழப்பாகும். வணிகர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வரும் தலைவராக அவர் இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!