வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது

வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது. வண்டலூர் பூங்காவில் கடந்த 21-ம் தேதி நீர் யானை குட்டி ஒன்றை ஈன்றது.

இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வனவிலங்குகளை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், நீர் யானை குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

பிரகுர்தி என்ற பெண் நீர் யானை 8 மாத கர்ப்பத்துக்கு பிறகு குட்டியை ஈன்றது. குட்டி நீர்யானையை தாய் சிறப்பாக கவனித்து வருகிறது.

பிரசவத்துக்கு பிந்தைய எதிர்மறை சமநிலை மற்றும் பாலூட்டும் அழுத்தத்தை எதிர்த்து போராட தாய்க்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நீர்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும்.

தண்ணீருக்குள்ளேயே பாலூட்டும் திறனைக் கொண்டுள்ளன. இந்த மகிழ்ச்சியான நிகழ்வு, அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி இருப்பதை உணர்த்துகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு