வந்தே பாரத் உள்பட தென்மாவட்டம் செல்லும் ரெயில்கள் சேவையில் மாற்றம்

தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டம் செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், மின்சார ரெயில்களின் சேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு இல்லாத அந்தோதியா சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் உள்பட சில ரெயில்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி வரும் 14-ம் தேதி வரையில் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சில கூடுதல் வேலையின் காரணமாக பராமரிப்பு பணிகளை வரும் 18-ம் தேதி வரையில் நீடிக்க சென்னை கோட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்பட உள்ளது.

* நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

* செங்கோட்டையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பொதிகை அதிவிரைவு ரெயில் (12662) செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

*மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.

* நெல்லையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

*மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் அதிவிரைவு ரெயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும்.

* கன்னியாகுமரியிலிருந்து வரும் 15-ம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.

* கன்னியாகுமரியிலிருந்து வரும் 14-ம் தேதி மாலை 6 15 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ஆகிய மாற்றுப்பாதை வழியாக டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும்.

* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரெயில் வரும் 15-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை