வந்தே மெட்ரோ ரயிலின் எக்ஸ்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகின.. என்னவெல்லாம் சிறப்பு?

ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தியாக, முற்றிலும் குளிா்சாதன வசதிகொண்ட புறநகா் ரயில் போக்குவரத்துக்காக, வந்தே பாரத் ரயில்களை போன்று வந்தே இந்திய ரயில்வே தயாரித்திருக்கும் மெட்ரோ ரயில்களின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அதிநவீன வந்தே மெட்ரோ ரயில்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஏற்கனவே சென்னை கடற்கரை – காட்பாடி இடையே சோதனை ஓட்டம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 16ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

வந்தே மெட்ரோ

என்னென்ன சிறப்புகள்?

வந்தே மெட்ரோ ரயில் 12 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதில் 1,150 போ் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2,058 போ் வரை நின்று கொண்டு பயணிக்க முடியும். இதனால் ஒரு பயணத்தில் சுமாா் 3,200 போ் பயணிக்கும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தகவல் அமைப்பு, எல்.இ.டி. விளக்கு, கைப்பேசி சாா்ஜ் ஏற்றும் வசதி, கழிப்பறை வசதி, ஆபத்துகால அறிவிப்பு, தீ உணா் கருவிகள், தானியங்கி கதவு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்: பழைய விடியோவைப் பகிர்ந்து டெலீட் செய்த திருமாவளவன்

இந்த ரயில்கள், முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்டிருப்பதோடு, மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றவை.

வந்தே மெடரோ உள்ளே

அதிக வேகத்தில் செல்வது, அதனை உடனடியாகக் குறைக்கும் தொழில்நுட்பம் இருப்பதால், பயணிகள் விரைவான பயணத்தை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு பெட்டிக்கும் நான்கு தானியங்கி கதவுகள் இருக்கும். ஏறி இறங்குவதற்கும் சிரமம் ஏற்படாது.

குறிப்பாக இந்த ரயிலில், கழிப்பறை வசதி இருப்பது சிறப்பம்சமாக அமைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்த கழிப்பறை அமைந்திருக்கும். அதில், கைகளை உலர்த்தும் கருவிகளும் பொறுத்தப்பட்டிருக்கும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கவச் என்ற பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில், குஜராத் மாநிலம் புஜ்-அகமதாபாத் இடையே இயக்கப்படவிருக்கிறது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து