இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஆயுதங்களைத் தவிர்த்து, பேச்சு வார்த்தை மூலம் அமைதிக்கான நிரந்தரத் தீரவைக் காண வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மை ஹோம் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் விழாவில் ரிஜிஜு உரையாற்றினார். நரேந்திர மோடி ஆட்சியில் வடகிழக்கு மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், அப்பகுதி மக்களுக்குப் பொன்னான வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
மணப்பூர் கலவரம் தொடர்பாக இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், குகி மற்றும் மைதேயி சமூகத்தின் சகோதர சகோதரிகள் ஆயுதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆயுதம் ஏந்துவதால் எந்தவித தீர்வும் கிடைக்காது. பேச்சு வார்த்தை மூலமே எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும். அப்போதுதான் நிரந்தரமான அமைதியைப் பெற முடியும்
“இது நம் அனைவருக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு" இதுபோன்ற நேரத்தில், மணிப்பூர் மக்கள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல்.. ஃபோன் மூலம் பயங்கரவாதியைக் கொன்ற 1996 சம்பவம்!!
மணிப்பூரில் ஓராண்டாக நிலவும் மோதல்..
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.
மைதேயி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும். இந்த மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.