வன்முறை எதிரொலி.. டாக்கா – கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

கொல்கத்தா,

வங்காளதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

வங்காளதேசத்தில் நிலவி வரும் சூழலை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வன்முறை எதிரொலியாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்கா வரை செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்துசெய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை செல்லும் கொல்கத்தா-குல்னா-கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் வருகிற 21-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு