வன்முறை எதிரொலி : மத்திய அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா தோல்வி

வன்முறை எதிரொலி: மத்திய அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா மக்களவை தேர்தலில் தோல்வி

அஜய் மிஸ்ரா

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை எதிரொலியாக மத்திய அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தார்.

2022-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர்.

விளம்பரம்

அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர். அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையொட்டி, அஜய் மிஸ்ரா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு பாஜக செவிசாய்க்கவில்லை.

விளம்பரம்

இந்நிலையில், லக்கிம்பூர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் உத்கர்ஷ் சர்மாவும் போட்டியிட்டார். இதில், பாஜக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா சமாஜ்வாதி கட்சியின் உத்கர்ஷ் சர்மாவை விட 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க : லோக் சபா தேர்தல் முடிவுகள்; தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவிகிதம்? – முழு விவரம் இதோவிளம்பரம்

விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தி கொலை செய்த ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ராவை, மக்களவை தேர்தலுக்காக லக்கிம்பூர் கேரி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

“விவசாயிகளின் காயத்தில் உப்பை தேய்த்தது போன்று பாஜக செயல்பட்டு இருக்கிறது. இந்த மக்களவை தேர்தலில் அஜய் மிஸ்ராவையும், பாஜகவையும் நாங்கள் ஒருசேர எதிர்க்க போகிறோம். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக விவசாயிகளுக்கு எதிரானவர்கள். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் சர்வான்சிங் பாந்தர் அறிவித்து இருந்தார்.

விளம்பரம்

இந்நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உத்தர பிரதேச மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக தோற்கடித்துள்ளனர்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024
,
Parliament Election 2024
,
uttar pradesh

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்