வன்முறை சம்பவத்தை படம்பிடித்து விடியோ பதிவிட்ட 2 பத்திரிகையாளர்கள் கைது!

வன்முறை சம்பவத்தை படம்பிடித்து விடியோ பதிவிட்ட குற்றச்சாட்டில் பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நார்த் 24 பார்கனாஸ் மாவட்டத்தின் தக்‌ஷிந்தரி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன், நடைபெற்ற காளி பூஜை நிகழ்ச்சியில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் நிகழ்ந்த வன்முறைக் காட்சிகளை படம்பிடித்து தங்களுக்குச் சொந்தமானதொரு உள்ளூர் செய்தித் தளத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்முறை தொடர்பான இந்த காட்சிகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக, விடியோ பதிவிட்ட இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், செய்தி நிறுவன அலுவலகத்திலிருந்து கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல்ல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

நியூசி. ஒருநாள், டி20 தொடர்: இலங்கைக்கு புதிய கேப்டன்!