வயநாடுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

வயநாடுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்புகேரளத்தில் பேரிடா் பாதித்த வயநாடு பகுதிக்கு திண்டுக்கல் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ரூ.4 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.

திண்டுக்கல்: கேரளத்தில் பேரிடா் பாதித்த வயநாடு பகுதிக்கு திண்டுக்கல் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ரூ.4 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். மேலும், ஆயிரக்கணக்கானோா் தங்களது உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனா். இந்த மக்களுக்கு உதவும் வகையில், திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

200 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 லட்சத்திலான நிவாரணப் பொருள்களுடன் புறப்பட்ட வேனை, மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கோட்டைக்குமாா்(பொது), முருகன் (வளா்ச்சி), செஞ்சிலுவைச் சங்கத்தின் அவைத் தலைவா் என்எம்பி. காஜாமைதீன், செயலா் எம்.ஏ. சையது அபுதாஹீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு