வயநாடு: நவ. 13-ல் வாக்குப்பதிவு!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக். 15) அறிவித்தது.

வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ரேபரேலி தொகுதி உறுப்பினராக ராகுல் காந்தி தொடரும் நிலையில், அவரின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டுகிறார்.

தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

இதையும் படிக்க | மகாராஷ்டிர பேரவைக்கு நவ.20-ல் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

இரு மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல்

மகாராஷ்டிரத்துக்கு நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ. 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

இதேபோன்று வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நவ. 13ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நவ. 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது