வயநாடு vs ரேபரேலி.. ராகுல் ராஜினாமா செய்ய போகும் தொகுதி எது?

வயநாடு vs ரேபரேலி.. ராஜினாமா செய்ய போகும் தொகுதி எது? – ராகுல் காந்தி சொன்ன விளக்கம்!

ராகுல் காந்தி

ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் எதைத் தக்கவைத்துக் கொள்வது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என அங்கு வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மல்லபுரத்தில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி சென்றார்.

இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடியைப் போல, நான் ஒரு கடவுளால் வழிநடத்தப்படவில்லை… எல்லா முடிவுகளையும் கடவுள்தான் எடுக்கிறார். ஆனால் நான் சாதாரண மனிதனான எனக்கு அந்த ஆடம்பரம் இல்லை. இந்தியாவின் ஏழை மக்கள்தான் என் கடவுள். வயநாட்டு மக்கள்தான் என் கடவுள். என்னைப் பொறுத்தவரை, நான் உங்களிடம் பேசுவது மிகவும் எளிதானது. வயநாடு மற்றும் ரேபரேலி மக்களுக்கு நான் என்ன உறுதியளிக்கிறேன்… நான் எந்த முடிவை எடுத்தாலும்… நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” என்றார் காந்தி.

விளம்பரம்

இதையும் படிங்க :
“முதலமைச்சராக தான் சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைப்பேன்”- சபதத்தை நிறைவேற்றிய சந்திர பாபு நாயுடு

தேர்தலுக்கு முன்பு அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறிய பாஜக தலைவர்கள், தற்போது அதனை வணங்குவதாக ராகுல் விமர்சித்துள்ளார். மேலும், தான் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்பதை தேர்தல் முடிவு மூலம் பிரதமருக்கு மக்கள் பாடம் புகட்டி இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election 2024
,
raebareli
,
Rahul Gandhi
,
Wayanad

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்