வயநாட்டில் உதவி செய்த தமிழக செவிலியருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

வயநாட்டில் உதவி செய்த தமிழக செவிலியர் சபீனாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

பின்னர், செவிலியர் சபீனாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொண்ணாடை அணிவித்து, பாராட்டு கேடயம் வழங்கி கவுரவித்தார். அதேபோல், வயநாட்டில் மருத்துவம் மற்றும் பல்வேறு உதவிகளை செய்த மருத்துவர் சரவணன் மற்றும் அவருடைய குழுவினர் 8 பேரையும் பாராட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்தார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி