வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு..!

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு..!

கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சிக்கிய நிலையில் 1000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் உள்ள அணை நிரம்பிய நிலையில் அனையின் நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

வயநாடு பகுதில் தொடர்ந்து பெய்த கனமழையால் சூரல் மலை பகுதியில் லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் மக்களுக்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை விடப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 பயங்கரமான நிலச்சரிவுகளால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Heavy rain
,
kerala

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்