வயநாட்டை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை!

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை… 2 பேர் உயிரிழப்பு – 50 பேர் மாயம்!

ஹிமாச்சல் பிரதேசம் வெள்ளம்

இமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா, மண்டி, குலு உள்ளிட்ட மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 2 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேரை காணவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சிம்லாவில் உள்ள ராம்பூர், மண்டியில் உள்ள பதர், குலுவில் உள்ள நிர்மந்த் மற்றும் ஜாவோன் பகுதிகளில் மேகவெடிப்பால் கனமழை கொட்டியது. இதில், ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சுமார் 50 பேர் காணவில்லை.

ALSO READ | வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு… தீவிர மீட்பு பணியில் ராணுவம்!விளம்பரம்

தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்பு படையினர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கியவரை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி காப்பாற்றினர். உத்தரப்பிரதேசத்தில் கனமழையின்போது சுவர் இடிந்து விழுந்ததில், சாலையில் நடந்து சென்றவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Heavy rain
,
Himachal Pradesh

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்