வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சரிந்த பங்குச் சந்தை!

வரலாறு காணாத உயர்வையடுத்து முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட தொடங்கியதால் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் சரிந்தனு. வர்த்தக முடிவில், பெஞ்ச்மார்க் குறியீடுகள் சிறிய மாற்றத்துடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.40 புள்ளிகள் சரிந்து 82,555.44-ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.10 புள்ளிகள் உயர்ந்து 25,279.80 புள்ளிகளில் நிலைபெற்றது.

காலை நேர வர்த்த நேரத்தில் உயர்ந்து தொடங்கிய நிஃப்டி 25,300 புள்ளிகள் சென்ற பிறகு சரிய தொடங்கியது. கடைசி நேர வர்த்தகத்தில் சற்று உயர்ந்த நிலையில் மீண்டும் சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் தொடர்ந்து 11வது நாள் உயர்வு இன்று முடிவுக்கு வந்த நிலையில், நிஃப்டி 50 ஆனது அதன் 14வது நாள் பேரணியை தொடர்ந்தது வருகிறது.

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் ஓஎன்ஜிசி, இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

துறைகளில், வங்கி மற்றும் மூலதன பொருட்கள் குறியீடுகள் தலா 0.5 சதவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் ஊடகம், மின்சாரம், உலோகம், ரியாலிட்டி மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை 0.5 முதல் 1.5 சதவிகிதம் சரிந்தது.

பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு சற்று லாபத்துடன் முடிவடைந்த நிலையில் ஸ்மால்கேப் துறை குறியீடும் 0.5 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் அபாட் இந்தியா, பாம்பே பர்மா, எரிஸ் லைஃப், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், எச்.எஃப்.சி.எல், ஜிண்டால் சா, ஜே.எம் பைனான்சியல், லூபின், எம் அண்ட் எம் பைனான்சியல், எம்பாசிஸ், ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ், பி.சி.பி.எல், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், பிஐ இண்டஸ்ட்ரீஸ், பாலி மெடிக்யூர், குவெஸ் கார்ப், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், வோல்டாஸ் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து வர்த்தகமானது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) விடுமுறை அனுசரிக்கப்பட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமையன்று) ரூ.1,735.46 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.40 சதவிகிதம் குறைந்து 77.21 அமெரிக்க டாலராக உள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!