வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய காலை வர்த்தகத்தின் போது புதிய சாதனை உச்சத்தை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் ஃபெட் முடிவுக்கு முன்னதாக ஐடி துறைகளின் பங்குகளை விற்று லாபத்தை பதவி செய்ததால் சரிந்து முடிந்த பங்குச் சந்தை.

டாப் 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் காலை நேர வர்த்தகத்தில் 246.72 புள்ளிகள் உயர்ந்து 83,326.38 புள்ளிகள் உயர்ந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் 82,948.23 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 41 புள்ளிகள் சரிந்து 25,377.55 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை தலா 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்த நிலையில், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகளும் சரிந்து முடிந்தது.

மறுபுறம் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் ஷாங்காய் உயர்ந்து முடிந்தது. ஹாங்காங்கில் தேசிய விடுமுறையை முன்னிட்டு இன்று வர்த்தகம் நடைபெறவில்லை. ஐரோப்பிய சந்தைகள் சரந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்தன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் வட்டி விகிதக் குறைப்பு முடிவுக்கு முன்னதாக உலகளாவிய சந்தைகளிலிருந்து கலவையான குறிப்புகள் வெளிவந்தன.

ஃபெட் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரையிலும் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.482.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.71 சதவிகிதம் குறைந்து 73.18 அமெரிக்க டாலராக உள்ளது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!