வரலாறு படைத்த ஜானிக் சின்னர்..! இத்தாலியின் முதல் வீரர்!

ஷாங்காய் மாஸ்டர்ஸின் அரையிறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் வென்றதன்மூலம் ஏடிபி வருடாந்திர முடிவில் நம்.1 என்ற இடத்தை தக்கவைத்த முதல் இத்தாலியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இத்தாலியின் ஆண்கள் பெண்கள் பிரிவுகளிலும் சேர்த்தும் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிகையலங்கார நிபுணர் வெளியிட்ட தோனியின் புதிய புகைப்படங்கள்!

1973இல் கணினி முறையில் இந்த ஏடிபி தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இத்தாலியில் யாரும் ஏடிபி வருடாந்திர முடிவில் முதலிடத்தை தக்கவைத்ததில்லை. இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் சின்னர்.

உலக அளவில் சின்னர் ஏடிபி வருடாந்திர முடிவில் முதலிடத்தை தக்கவைத்த 19ஆவது வீரராக இருக்கிறார். ஆக்டிவ் வீரர்களில் ஜோகோவிச், ரஃபேல் நடால், அல்கராஸ் வரிசையில் 4ஆவது வீரராக இருக்கிறார்.

இதையும் படிக்க:இந்திய அணியை வழிநடத்தும் ராபின் உத்தப்பா!

23 வயதாகும் சின்னர் இந்தாண்டு ஆஸி. ஓபன், அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஏடிபி டூரில் 6 டைட்டில்களை வென்று அசத்தினார்.

ஞாயிறுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸிலும் வென்று தனது 7ஆவது கோப்பையை வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னர் 11,010 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். கார்லோஸ் அல்கராஸ் 7,010 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார்.

ஏடிபி தரவரிசைப் பட்டியல்.

சின்னர், 17 வாரங்களாக முதலிடத்தை தக்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சின்னர் கூறியதாவது:

இது அற்புதமானது. இது சிறுவனாக இருக்கும்போதும் இளைஞராக இருக்கும்போதும் நம்.1 ஆகுவது என்பது நான் கண்ட கனவு. இது ஒரு சிறப்பான உணர்வு. இது எனக்கு மிகவும் முக்கியமானது. எனது குடும்பம், நண்பர்கள், எனது அணி என இவர்கள் இல்லாமல் என்னால் இதைச் சாதித்து இருக்க முடியாது என்றார்.

HISTORY MADE!
Jannik Sinner claims ATP Year-End No. 1 presented by PIF, becoming the first Italian to achieve this historic feat! #PIF | #ATPRankings | #partnerpic.twitter.com/1nKno7Gs0v

— ATP Tour (@atptour) October 12, 2024

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!