வரலாற்று வெற்றி மகிழ்ச்சி…! கோப்பையுடன் உறங்கும் வங்கதேச கேப்டன்!

வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

முதல் இன்னிங்கிஸில் 138 ரன்கள் அடித்த லிட்டன் தாஸூக்கு ஆட்டநாயகன் விருதும், மெஹதி ஹசனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டன.

பாகிஸ்தான் அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போட்டியில் வெற்றிபெற்று இருந்தது. அதன் பிறகு ஷான் மசூத் பாகிஸ்தான் கேப்டனாக உயர்த்தப்பட்டார். ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியிருந்த நிலையில் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமனம்!

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

வெற்றி மகிழ்ச்சியில் உள்ள வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கோப்பையுடன் ‘குட் மார்னிங்’ என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வங்கதேசம் சமீபகாலமாக போராட்டங்கள், அரசியல் மாற்றங்கள் என அதன் மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

கோப்பையுடன் உறங்கும் வங்கதேச கேப்டன்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை