வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று(அக். 1) காலை வெளியாகியுள்ள தகவலின்படி, 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 48.50 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது.

Related posts

தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்