வலுவான நிலையில் இலங்கை: கமிந்து, குசல் மெண்டிஸ் அசத்தல் சதம்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இதையும் படிக்க | ஷகிப் அல் ஹசனின் பாதுகாப்பு எங்கள் கைகளில் இல்லை: வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர்

நியூசிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை, முதல்நாளான வியாழக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் சோ்த்தது. தினேஷ் சண்டிமல் சதம் விளாசி ஸ்கோரை உயா்த்த, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்து விளையாடி வந்தனர்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில மணிநேரத்திலேயே மேத்யூஸ் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்குப் பின் வரிசையில் வந்தவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ச்சியாக 8 வது போட்டியில் 5 வது சதத்தை நிறைவு செய்த கமிந்து மெண்டிஸ் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உள்பட 182 ரன்கள் எடுத்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த குசல் மெண்டிஸ் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் எடுத்தார். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்தது.

இலங்கை அணி 163.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்த நிலையில் இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செயா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இதையும் படிக்க | இவர்களுக்கு எதிராக நன்றாக செயல்பட்டால் ஆஸி.க்கு வெற்றி கிடைக்கும்: கிளன் மேக்ஸ்வெல்

நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் முதல் ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஃபெர்னாண்டோவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டெவான் கான்வேயும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்துள்ளது. கனே வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க | கான்பூர் டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டம் ரத்து!

Related posts

Gwalior Man Paraded For Molesting Minor Girl; Booked Under POCSO Act

Haryana Police Arrest 18 Farmers For Stubble Burning In Kaithal; Register Cases Against 22

Bajaj Finance Shares Surge Over 6% After Posting 13% Rise In Q2FY25 Net Profit