வல்லபாய் படேல் சிலையில் விரிசலா..? சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு

கிவாடியா,

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் கிவாடியா என்ற இடத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை பிரமாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த சிலை அந்தப் பகுதியின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேல் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக ஒரு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கடந்த 8-ந்தேதி இந்த பதிவு வெளியானது தெரியவந்தது. அதில் "ஒற்றுமை சிலையில் விரிசல் விழ ஆரம்பித்து இருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம்" என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் பிரச்சினை ஏற்பட்டதும் அந்த பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போலியான பதிவை வெளியிட்ட மர்மநபரை தேட ஆரம்பித்து உள்ளனர்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!