வளர்ப்பு பூனையால் நடந்த விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டர் பலி

பூனையைப் பிடிக்கச் சென்றபோது, கிணற்றில் தவறிவிழுந்து பெயிண்டர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே, நரசிம்மநாயக்கன் பாளையம், கொல்லனூர் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி.

பெயிண்டரான இவர், தனது வளர்ப்புப் பிராணியான பூனையுடன் அருகேயுள்ள தோட்டத்திற்குச் சென்று உள்ளார். அப்போது, கிணற்றின் ஓரத்துக்கு அந்த பூனை சென்று உள்ளது. கார்த்தியும் விடாமல் பின் தொடர்ந்து பூனையைப் பிடித்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக பூனையுடன் சேர்ந்து 150 அடி ஆழம் உள்ள கிணற்றில் கார்த்தி தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் கார்த்தி நீரில் மூழ்கிய நிலையில், அந்த பூனை கிணற்றின் மணல் திட்டில் அமர்ந்துக் கொண்டது. ஆனால் வெளியேற முடியவில்லை, அதன் அருகே தண்ணீர் பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து பெரியநாயக்கன் பாளையம் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நிலையில் கார்த்தியை மீட்டனர். பாம்பு மற்றும் பூனையை உயிருடன் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது