நீதித்துறை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக தலைமை நீதிபதி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
தற்போது, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு முன்பு நடக்கும் வழக்கு விசாரணைகளும், தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளும் மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவின்படி, இவை 'யூ டியூப்' தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில், விரைவில் சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளிலும் வழக்கமான அனைத்து விசாரணைகளையும் நாள்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட்டு திட்டமிட்டுள்ளது. நீதித்துறை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இம்முடிவை எடுத்துள்ளார்.சோதனை அடிப்படையில், நேற்று அனைத்து அமர்வுகளின் வழக்கு விசாரணைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.