“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஜெகன்மோகன் ரெட்டி

“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் பேச்சு!

ஜெகன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மின்னணு வாககுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விமானங்களின் கருப்புப் பெட்டியுடன் ஒப்பிட்டதோடு, அதனை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்று நேற்று (ஜூன் 17) குற்றம் சாட்டி இருந்தார்.

விளம்பரம்

இதே போல சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:
3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அல்ல, காகித வாக்குச்சீட்டுகளால் ஆதரிக்கப்படுகின்றன. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும். நீதி வழங்குவதை உறுதி செய்வதுடன், அதன் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
JaganMohan Reddy
,
Lok Sabha Election Results 2024

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?