வானிலைக்கே சவால்.. மழையை நிறுத்த, பொழியவைக்க மத்திய அரசு திட்டம்!

இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வானிலையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

அதாவது, குறிப்பிட்ட பகுதியில், மழையை பொழியவைக்கவும், அதிக மழையை நிறுத்தவும், இடி மற்றும் மின்னலையும் செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், சுதந்திர தினத்தன்று புது தில்லியில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போது, மழை பொழியாமல் தடுக்கவும் முடிவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து புவி அறிவியல் அமைச்சக செயலாளர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில், முதற்கட்டமாக, செயற்கை மழையை ஏற்படுத்துவது, மழை பொழிவை கட்டுப்படுத்துவது போன்றவை சோதனை முறையில் செய்து பார்க்கப்படும். மேகக் கூட்டங்களுக்கான கிளவுட் சேம்பர்ஸ் அடுத்த 18 மாதங்களில் தயாரிக்கப்படும். ஆனால், விரைவில், வானிலையை செயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களைக் கடத்தி சைபர் அடிமைகளாக்கி மோசடி! சினிமாவை விஞ்சும் கும்பல்!!

இதனைத் தொடர்ந்து, வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமானதாக கொடுக்கும் தொழில்நுட்பமும் கொண்டு வரப்படும். இதன் மூலம், இந்தியா வானிலை-அறிவுசார் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதோடு, திடீர் மேக வெடிப்புச் சம்பவங்கள் நிகழாமலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாட் ஜிபிடி போன்றே மௌசம் ஜிபிடி உருவாக்கப்பட்டு, பயனர்கள் எங்கிருந்தாலும் வானிலை குறித்த அறிவிப்புகளை உடனடியாக அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மழைப் பொழியை உருவாக்குதல், கட்டுப்படுத்துதால் போன்றவையும், விமானங்கள் மூலம் மேகங்களை உருவாக்கும் முறையும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து