வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். NO:0999/A1/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: AGM (Digital Marketing & Tourism Promotion) – 1

சம்பளம்: மாதம் ரூ.70,000 – ரூ.1,00,000

பணி: Associate (Digital Marketing) – 3

சம்பளம்: மாதம் ரூ.20,000 – ரூ.40,000

பணி: Senior Associate (Events and Venues) – 3

சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.40,000

பணி: Event Manager (Madurai) – 1

சம்பளம்: மாதம் ரூ.50,000 – ரூ.75,000

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுற்றுலா அல்லது சந்தையியல் துறையில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate (IT Monitoring) – 1

சம்பளம்: மாதம் ரூ.20,000 – ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் ஐடி பிரிவில் பிஇ, கணினி பிரிவில் எம்.எஸ்சி முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate (Project Formulation) – 2

சம்பளம்: மாதம் ரூ.50,000 – ரூ.75,000

தகுதி: சுற்றுலா மற்றும் மருத்துவமனை மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Architects – 3

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: பி.ஆர்க் முடித்து நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Site Engineer (Civil -3 and Electrical -1) – 4

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ முடித்து ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க |வெளியானது 2025-ம் ஆண்டுக்கான அட்டவணை! குரூப்-4 தேர்வு எப்போது?

பணி: Interns (Architect) – 4

பணி: Interns (Civil Engineering) – 4

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.ஆர்க் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 202.10.2024

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது