வாழப்பாடி பேருந்து நிலையத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றம்!

வாழப்பாடி: வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்த, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன், டாக்டர் அம்பேத்கர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகிய 3 தலைவர்களின் சிலைகளை வியாழக்கிழமை இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

விரைவில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்பதால் மக்கள்,பயணிகள்,வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம்,வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில், மறைந்த தேசிய தலைவர்கள் டாக்டர். அம்பேத்கர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரது முழு உருவ சிமென்ட் கான்கிரீட் சிலைகள் உள்ளன.

பேருந்து நிலையத்தின பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, ரூ.8.5 கோடி செலவில் நவீன ஈரடுக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைந்துள்ளது. எனவே, இந்த சிலைகளை அகற்றி கடலூர் சாலையில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வைத்துக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது.

இதையும் படிக்க |3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்!

வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவுவாயில் இருந்த தலைவர்களின் சிலைகள்.

ஆனாலும், தலைவர்கள் சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் கடந்தும் பேருந்து நிலையத்தை திறப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், டாக்டர் அம்பேத்கர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரு நாள்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே, வியாழக்கிழமை இரவோடு இரவாக, வாழப்பாடி பேருந்து நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர், இந்திரா காந்தி, மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரது சிலைகளும் அகற்றப்பட்டது.

தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டதால், வாழப்பாடி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்பதால் வாழப்பாடி பகுதியில் மக்கள், பயணிகள், வாகன ஓட்டுநர்கள், வணிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!