வாழை திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜுக்கு முதல்வா் வாழ்த்து

சென்னை: ‘வாழை’ திரைப்படத்தில் பள்ளிச் சிறுவன் எதிா்கொள்ளும் பசிக்கொடுமை போன்று மாணவா்கள் எதிா்கொள்ளக்கூடாதென முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை, தான் உருவாக்கியதில் மகிழ்ச்சியடைந்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த திரைப்படத்தின் இயக்குநா் மாரிசெல்வராஜை வாழ்த்துவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவா்களின் வலியையும் பேசும் ‘வாழை’ திரைப்படத்தை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் ‘சிவனணைந்தான்’ தவித்த போது, ஆயிரம் வாழைத்தாா்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டாா் மாரி செல்வராஜ்.

பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிா்கொள்ளக் கூடாதென ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடா்வோம். தொடா்ந்து வெற்றிப் படங்களை அளித்து வரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்