‘வாழை’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படத்தின் முதல் பாடலான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ தற்பொழுது வெளியாகியுள்ளது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'வாழை'. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். மாரி செல்வராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'தென்கிழக்கு தேன் சிட்டு' தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் பாடகர் தீ பாடியுள்ளார். இப்பாடல் பள்ளி சிறுவனுக்கும் அவனது ஆசிரியைக்கும் இடையே உள்ள அழகான உறவை மையப்படுத்தி அமைந்துள்ளது.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 -ம் தேதி வெளியாகவுள்ளது.மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தை இயக்கி வருகிறார்.

பனங்கறுக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு! பசி மறக்கும் நாள் பிறக்கும்வலி மறந்தே நீ கூத்தாடு!✨#Thenkizhakku From #Vaazhai ❤️ Out Now! ✨ https://t.co/VKL1PbqW8P@Music_Santhosh@talktodhee@disneyplusHSTam@RedGiantMovies_@thinkmusicindia@Fmpp_Filmspic.twitter.com/cA7DeoDc66

— Mari Selvaraj (@mari_selvaraj) July 18, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!