‘வாழ்க்கையில் அது இயல்பான ஒன்று’ – நடிகை சமந்தா

எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம் என்று நடிகை சமந்தா கூறினார்.

சென்னை,

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான். வாழ்க்கையில் போட்டி என்பது இயல்பான ஒன்று. நான் அதை எதிர்மறையாக நினைக்கவில்லை.

மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.'ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்''என்றார்.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!