வாழ்வா சாவா போட்டியில் நியூசிலாந்து மகளிரணி! இந்தியாவுக்கும் சிக்கல்!

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் முக்கியமான போட்டியில் நியூசிலாந்து இலங்கை அணியுடன் மோதுகிறது.

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் துபை மற்றும் ஷார்ஜாவில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி முதல் போடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகள் அக்டோபர் 20 வரை நடைபெற இருக்கின்றன. மேலும், துபை மற்றும் ஷார்ஜா மைதானங்கள் மொத்தமாக 23 போட்டிகளை நடத்தப்படவிருக்கின்றன.

குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளில் உள்ள 5 அணிகள் தலா 4 போட்டிகளிலும் விளையாடும். இதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் 4 அணிகள் (குரூப் ஏ-2, குரூப்-2) அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதையும் படிக்க:சிகையலங்கார நிபுணர் வெளியிட்ட தோனியின் புதிய புகைப்படங்கள்!

குரூப் ஏவில் ஆஸி. 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்தில் இந்தியா 4 புள்ளிகளுடன் இருக்கிறது.

3ஆம் இடத்திலுள்ள நியூசிலாந்து இந்தப் போட்டியில் வென்றால் 4 புள்ளிகள் கிடைக்கும். அடுத்த போட்டியிலும் வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கையுடனான இந்தப் போட்டியில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து இந்தப் போட்டியில் வென்று அடுத்த போட்டியிலும் வென்றால் இந்தியாவுக்கு பிரச்னை. இந்தியா ஆஸி. உடனான போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அதனால், இந்தப் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இலங்கை அணி ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியதால் அந்த அணிக்கு இந்தப் போட்டியால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!