விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை – விஜய்யின் த.வெ.க. கட்சி அறிவிப்பு

இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் த.வெ.க. போட்டியிடாது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார்.இதனைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ந் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல்கமிஷன் அறிவித்தது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலையொட்டி கடந்த 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 21-ந் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq@TVMIoffl@Jagadishbliss@RIAZthebosspic.twitter.com/vwy8VCLjwS

— N Anand (@BussyAnand) June 18, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!