விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோ வெளியீட்டுத் தேதி!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண விடியோவின் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் 2022, ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்து சில நாள்கள் கழித்து திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோவை, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாக்கினர். அந்த விடியோவின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படிக்க: அயோத்தி குரங்குகளுக்காக ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய அக்‌ஷய் குமார்!

ஆனால், இவர்கள் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் முழுமையான விடியோ இன்னும் வெளியாகவில்லை.

1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட விக்னேஷ் சிவன் – நயன் தாரா திருமண ஆவண விடியோவை விரைவில் வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த திருமண நிகழ்வு விடியோ வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!