விஜயவாடா வெள்ளம்: கழுத்தளவு தண்ணீரில் கைக்குழந்தையை காப்பாற்றிய மக்கள்

கழுத்தளவு வெள்ள நீரில் பிஞ்சு குழந்தையை பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து காப்பாற்றிய மக்கள்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆந்திராவின் விஜயவாடா நகரமே தத்தளித்து வருகிறது.

அங்கிருக்கும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் கழுத்தளவு நீரில் நடந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டன. பெட்ரோல் நிலையங்களையும் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

விளம்பரம்

இதற்கிடையே, விஜயவாடாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக, சிங் நகர் காலனியில் கழுத்தளவுக்கு தண்ணீர் தேங்கியது.

#JUSTIN கைக்குழந்தையை பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து காப்பாற்றிய பெற்றோர்#AndhraRain#Vijayawada#HeavyRain#Flood#News18tamilnadu | https://t.co/7dpn9FCtgjpic.twitter.com/LYJKSuF2wU

— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 4, 2024

விளம்பரம்

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள், 2 மாத குழந்தையை பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து காப்பாற்றியுள்ளனர். கழுத்தளவு வெள்ளம் சென்ற நிலையில் குழந்தையை தலைக்கு மேல் தூக்கி வந்து காப்பாற்றிய காணொலி வெளியாகி உள்ளது.

Also Read:
‘ஆபரேஷன் பேடியா’… உ.பி-யை அச்சுறுத்தும் ஓநாய்கள் – கண்டதும் சுட யோகி ஆதித்யநாத் உத்தரவு

ஆபத்தான முறையில் தூக்கிச் செல்லப்பட்டாலும், நல்வாய்ப்பாக வெள்ளத்தில் இருந்து குழந்தையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே, அப்பகுதியில் வசிக்கும் மக்களை படகு மூலம் மீட்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Child
,
Flood
,
Heavy rain
,
Rescued Baby

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!