விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு அங்கீகாரம் கோரி கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையத்திதல் பதிவு செய்திருந்தனர்.

த.வெ.க. முதல் மாநாடு: நாளை அறிவிக்கிறார் விஜய்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக நாளை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை அதன் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும், அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுழற்பந்து சவாலை சமாளிக்குமா இந்தியா?- வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

குழந்தை சாப்பிட அடம் பிடிக்கிறதா? என்ன செய்யலாம்?

செருப்பை கழற்ற கூறிய டாக்டருக்கு அடி, உதை; வைரலான வீடியோ