விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மகாராஜா' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சென்னை,

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள 50-வது திரைப்படம் 'மகாராஜா'. இந்த படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'மகாராஜா' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'மகாராஜா' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#MaharajaFromJune14
Written & directed by @Dir_Nithilan@anuragkashyap10#NattyNataraj@mamtamohan@abhiramiact @b_ajaneesh @philoedit
@dineshkumarpurushothaman @selvaartdir @rajakrishnan_mr @anlarasu007 @Passionstudiosoffl_ @therouteofficial #SudhanSundaram… pic.twitter.com/Dle2aiEoP0

— VijaySethupathi (@VijaySethuOffl) June 5, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!