விஞ்ஞான யுகத்திலும் ரயில் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல: கமல்ஹாசன்

விஞ்ஞான யுகத்திலும் ரயில் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர்.

அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: விரைவான நீதி கேட்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி பேரணி

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு-தார்பங்கா பாக்மதி விரைவு ரயில், மோதியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில், தண்டவாளங்களும், ரயில் பெட்டிகளும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால், அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் பலவும் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!