விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவித்து இருந்தார். இந்த நிலையில், முதல் அமைச்சரின் அறிவிப்பின்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதேபோல், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!