விடுதலை – 2 வெளியீட்டுத் தேதி எப்போது?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை – 2 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சூர்யாவுடன் நடனமாடிய ஸ்ரேயா!

இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை – 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விடுதலை – 2 படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு வேலைகளுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்