விடுதி அறையில் மாட்டிறைச்சி சமைத்த 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்

பெர்ஹாம்பூர்,

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று பரலா மகாராஜா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 7 மாணவர்கள் தங்கள் அறையில் மாட்டிறைச்சி சமைத்துள்ளனர். இது தொடர்பாக விடுதியில் தங்கியிருந்த பிற மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியதற்காக அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவருக்கு மட்டும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள் அருகே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்