கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 142 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான இருபாலரும் அக்டோபர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்(ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்) தெரிவித்திருந்தன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.
விளம்பர எண்: AIASL/05-03/HR/679
பணி: Utility Agent cum Ramp Driver
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.2,960
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வாசிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் |குரூப் 4 தோ்வு முடிவுகள் வெளியீடு; பணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு
பணி: Handyman
காலியிடங்கள்: 112
சம்பளம்: மாதம் ரூ22,530
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும ஹிந்தி வாசிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, பொது அறிவுத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த வேண்டிய முறை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி செலுத்த வேணடும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiasl.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.10.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.