விநாயகர் பூஜை சர்ச்சை: பாஜக பகிர்ந்த இஃப்தார் விருந்து புகைப்படம்! இப்போது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில் பங்கேற்றது பேசுபொருளாகியிருக்கும் நிலையில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது.

அதாவது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றிருப்பதற்கு, மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்திருக்கும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஸ்சாத் பூனாவாலா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இல்ல பூஜையில் பிரதமர் பங்கேற்பதா? வழக்கறிஞர்கள், தலைவர்கள் அதிர்ச்சி!

அதாவது, 2009ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அளித்த இஃப்தார் விருந்துக்கு, அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கேஜி பாலகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். இஃப்தார் விருந்தில் பிரதமரும் பாலகிருஷ்ணனும் பேசும்போது எடுத்தப் படத்தை பாஜக தற்போது பகிர்ந்துள்ளது.

2009- PM Manmohan Singh's Iftaar Party was attended by then CJI KG Balakrishnan- Sshhhh – Yeh Secular hai.. judiciary is safe!
PM Modi attends Ganesh Puja at current CJI House – oh God Judiciary compromised pic.twitter.com/vhkUdRRVHI

— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind) September 12, 2024

மேலும் அவர் அதில், 2009 – பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இஃப்தார் விருந்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பங்கேற்றார். – நீதித்துறை பாதுகாக்கப்பட்டது!

பிரதமர் நரேந்திர மோடி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பங்கேற்றார் – நீதித்துறையில் சமரசம் ஏற்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி