வினேஷ் போகத்துக்கு எதிராகப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார்?

ஹரியாணா பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை களமிறக்குகிறது பாஜக.

ஹரியாணா மாநிலத்தில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக். 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக். 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஹரியாணா பேரவைத் தேர்தலையொட்டி, 67 வேட்பாளா்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் கடந்த செப். 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாநில முதல்வா் நாயப் சிங் சைனி லாட்வா தொகுதியில் போட்டியிடுகிறாா்.

இதையடுத்து 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் டிரில்லியனர் யார் தெரியுமா? 2-வது அதானி!

ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை பாஜக நிறுத்துகிறது.

யோகேஷ் பைராகி(35), ஏர் இந்தியாவின் விமானியாக பணியாற்றியுள்ளார். ஹரியாணா மாநில பாஜக இளைஞரணியின் துணைத் தலைவராக இருக்கிறார்.

சென்னை வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டது, கரோனா காலத்தில் வெளிநாட்டில் சிக்கித்தவித்த இந்தியரை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' இயக்கத்தில் பங்கேற்றது உள்ளிட்டவற்றில் அறியப்பட்டவர். பாஜக தலைமை அழைத்த நிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். தற்போது ஹரியாணா தேர்தலில் போட்டியிட உள்ளார்.

மேலும், ரோஹ்டக் தொகுதியில் மணிஷ் குரோவர், நூ தொகுதியில் சஞ்சய் சிங், பரோடாவில் பிரதீப் சங்வான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தோ்தலில் வெற்றிபெற்று தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் பாஜக உள்ளது.

காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!